உங்கள் வலைப்பூவின் தலைப்பை ( blog title ) மாற்றி GOOGLE மூலம் அதிக ஹிட்ஸ் பெறுவது எவ்வாறு என்பது பற்றி இங்கே படித்திருப்பீர்கள் .இப்போது உங்கள் வலைப்பூவை எவ்வாறு Redirect செய்வது என்பது பற்றி பார்க்கலாம் . அதற்கு முன் ரீ டைரக்ட் என்றால் என்ன என்று ஓர் சிறிய விளக்கம் .
உதரணமாக நீங்கள் ஓர் வாடகை வீட்டில் குடியிருக்கிறீர்கள் திடீர் என உங்கள் கம்பெனி தங்குவதற்கு உங்களுக்கு இலவசமாக ஓர் வீடு தருகிறது நீங்கள் இரு வீட்டிலும் வசிக்கிறீர்கள் ஆனால் உங்களைத் தேடி வரும் விருந்தினர் , நண்பர்கள் , கடிதங்கள் போன்றவை நீங்கள் வசிக்கும் எதாவது ஒரு வீட்டிற்கு மட்டும் வரவேண்டும் என்று நினைப்பீர்கள் அல்லவா .இதுவும் அது போன்று தான் .
.நீங்கள் வலைப்பூ எழுதிய ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு வலைப்பூவின் பெயரில் எழுதி இருப்பீர்கள் .சிறிது காலம் சென்ற பின் அதை விட்டுவிட்டு ஏதேனும் புதிய பெயரில் வலைப்பூ எழுதி இருப்பீர்கள் , உங்கள் நேரம் நீங்கள் இரண்டாவதாக எழுத ஆரம்பித்த தளம் முன்பு இருந்ததை விட அதிக வரவேற்பை பெற்றிருக்கும் .ஆனாலும் உங்கள் பழைய வலைப்பூவின் வாசகர்கள் பலரும் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை , அல்லது கூகிள் மூலம் வரும் புதிய வாசகர்களும் உங்கள் புதிய வலைப்பூவை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே உங்கள் பழைய வலைப்பூவின் முகவரியை இட்டால் அது தானாகவே உங்கள் புதிய வலைதள முகவரிக்கு வந்தால் நன்றாய் இருக்குமல்லவா . இதனை ரீ டைரக்ட் ( website redirection )மூலம் எளிதாக செய்யலாம் .
இதனை செயல் படுத்த
#-முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ரீ டைரக்ட் செய்ய விரும்பும் வலைப்பூவின் html பகுதிக்கு செல்லவும்
#-Design- EditHtml - Expand Widget Template செல்லவும்- (இதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை ஒருமுறை Backup செய்து கொள்ளுங்கள்)
#-இங்கே <head> என்னும் பகுதியை தேடவும்
#-அதன் கீழே இந்த ( html code ) கோடை சேர்த்து விடவும் .
<meta content='0;url=http://www.yourblogname.blogspot.com' http-equiv='refresh'/>
http://www.yourblogname.blogspot.com என்பது நீங்கள் எந்த தளத்திற்கு உங்கள் வாசகர்களை ரீ டைரக்ட் செய்கிறீர்கள் என பொருள் படும் எனவே http://www.yourblogname.blogspot.com இற்கு பதிலாக உங்கள் வலைப்பூவின் தளத்தை மாற்றி save செய்து விடுங்கள். அவ்வளவு தான் இனி உங்கள் பழைய வலைதள முகவரிக்கு செல்லும் அனைத்து வாசகர்களும் உங்கள் புதிய முகவரிக்கு திருப்பி அனுப்பபடுவர் .
முயற்சி செய்து பார்க்க என் பழைய முகவரி (http://technotamil.blogspot.com/)ஒன்றை கிளிக் செய்து பாருங்கள் அது தானாகவே இந்த (http://tamilwares.blogspot.com/)முகவரிக்கு திரும்பி விடும் .
இந்தப் பதிவு உபயோகமாக இருந்தால் தமிழ்10 மற்றும் இன்ல்ல்யில் உங்கள் ஓட்டை செலுத்தவும் .
tags - blogspot redirection , how to redirect blogspot using meta content.blog 301 redirect
-
4 comments:
சூப்பர் சார் மிகவும் சுலபமாக புரியம் படி பாடம் நடத்துகிறிர்கள்
பாடம் எல்லாம் இல்லைங்க சும்மா எனக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கும் சொல்றேன் அவ்ளோ தான் , தளத்துக்கு வந்தமைக்கு நன்றி சதீஷ்
Thanks Friend.!
# http://arimalamghss.blogspot.com/
@ ^^^^அருமையாக உங்கள் redirect தளம் ஆகிறது .
Post a Comment