உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற

சக வலைத்தளமான எதிர்நீச்சலின் தகவல் படி தமிழில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வலைபூக்கள் உள்ளன . இதில் நாளொன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு பதிவர்கள் ஓர் பதிவிட்டாலே தினமும் 1000திற்கும் மேற்பட்ட பதிவுகள்
வெளியாகும் . இதில் பெரும்பான்மையான ஹிட்ஸ் தமிழ்10 , தமிளிஷ் ( இப்போ இன்ட்லி ) உளவு , மற்றும் பல்வேறு தமிழ் திரட்டி தளங்கள் மூலம் கிடைக்கின்றது . இதன் மூலம் தினமும் 200 முதல் 1000 ஹிட்ஸ் வரை பதிவுகளின் தரத்தைப் பொறுத்து கிடைக்கும் .
திரட்டிகளின் மூலம் வரும் ஹிட்ஸ் என்பது mutual sharing ஹிட்ஸ் வகையை சார்ந்தது அதாவது நம் பதிவுகளை குறிச் சொற்களாக வாங்கி அதற்குப் பதிலாக நமக்கு ஹிட்சை வழங்குகிறது ( பழைய காலத்து பண்ட மாற்று முறை போல ). ஆனால் சில சமயம் நமக்கு போதிய வாக்குகள் கிடைக்கா விட்டால் திரட்டிகளிடம் இருந்து வரும் ஹிட்சும் குறைவாகவே இருக்கும் .

திரட்டிகளுக்கு அடுத்ததாக நமக்கு அதிக ஹிட்ஸ் தருவது ( கூகிள் , யாஹூ , பிங் ) போன்ற search engine களே ஆகும் .எனவே இன்று எவ்வாறு இந்த சர்ச் என்ஜின்கள் மூலம் அதிக ஹிட்ஸ் பெறுவது என்று பார்க்கலாம் . பொதுவாக கூகிள் ஓர் குறிப்பிட்ட சொல்லை தேடும் போது பேஜ் ரேங்க் ( page rank ) அதிகம் உள்ள வலைபதிவுகளையே முன்னிலைப் படுத்தும் . உதாரணமாக நண்பர் கேபிள் சங்கர் சினிமாவிமர்சனங்கள் எழுதுவதில் கில்லாடி , தினமும் அவர் பதிவுகளை அதிக எண்ணிக்கையில் உள்ள வாசகர்கள் படிப்பதால் அவர் பேஜ் ரேங்க்கும் அதிகமாக இருக்கும் .எனவே அவர் பதிவுகள் கூகிள் சர்ச்சில் முன்னணியிலேயே இருக்கும் . ஆனால் புதிய பதிவர்கள் / மற்றும் பேஜ் ரேங்க் குறைவாக உள்ள பதிவர்களுக்கு கூகிள் சேர்ச் மூலம் வரும் ஹிட்ஸ் மிக சொற்பமானதே ஆகும் . ஆனால் இதை ஓர் சிறிய trick மூலம் எளிதாக தீர்க்கலாம் .

பொதுவாக உங்கள் வலைபதிவுகளில் உங்கள் வலைப்பதிவின் பெயரும் - அன்றைய பதிவின் பெயரும் சேர்ந்தே இருக்கும் .( blog name > blog post title ) உதாரணமாக ( கவியின் காதலன் -அசடு வழியும் கலை ), இதை அப்படியே மாற்றி விட்டால் (அசடு வழியும் கலை - கவியின் காதலன் ) அதாவது முதலில் பதிவின் பெயரும் அதன் பின்பு உங்கள் வலைப்பக்கத்தின் பெயரும் வருவது போன்று இருந்தால் நிச்சயம் நீங்கள் எழுதும் பதிவுகள் முன்பு இருந்ததை விட கூகிளால் அதிக அளவில் திரட்டப்பட்டு , அதிக ஹிட்சும் பெறுவீர்கள் . இதை உங்கள் வலைப்பக்கத்தில் செயல் படுத்த


#-முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.


#-Design- EditHtml - Expand Widget Template செல்லவும்- (இதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை ஒருமுறை Backup செய்து கொள்ளுங்கள்)


<title><data:blog.pageTitle/></title>



#-அதில்மேலே குறிப்பிட்டு இருக்கும் html code ஐ கண்டறிந்து அதற்குப் பதிலாக கீழே இருக்கும் html code ஐ மாற்றி விடவும் .

<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/></title>
</b:if>



#-உங்கள் template ஐ சேவ் செய்து விடவும் .


அவ்வளவு தான் இனி உங்கள் பதிவு முன்பு இருந்ததை விட அதிக ஹிட்ஸ் பெறுவதை கண்கூடாக காணலாம் .பதிவு பிடித்திருந்தால் ஒரு ஒட்டு போடவும் . மேலும் தமிழ் திரட்டி தளங்களின் ஒட்டுபட்டைகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது எப்படி என்பது பற்றி படிக்க இங்கே செல்லவும் .

குறிச்சொற்கள் . blog tips , blog title change for seo , how to change blogspot title for good seo results


பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

12 comments:

ஆகுலன் said...

மிகவும் உபயோகமான பதிவு
நன்றி

Anonymous said...

வணக்கம்

பயனுள்ள தகவல்கள்.

உங்கள் வலைப்பூவினை www.meenakam.com/topsites இல் இணைக்கவும்.

நன்றி

மீனகம் குழுவினர்

அப்பாவி தமிழன் said...

/////akulan said...
மிகவும் உபயோகமான பதிவு/////
நன்றி akulan

விஷாலி said...

நன்றி

அப்பாவி தமிழன் said...

////மனசாட்சியே நண்பன் said...
நன்றி////


வருகை தந்தமைக்கு நன்றி

ஆர்வா said...

அருமையான பதிவு.. என் பதிவின் லிங்க் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி

அப்பாவி தமிழன் said...

அருமையான பதிவு.. என் பதிவின் லிங்க் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி////////
நன்றி நண்பரே ....

raj said...

fine friend

கோவை செய்திகள் said...

மிக சிறந்த பகிர்தல், மிகசிறப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அப்பாவி தமிழன் said...

nandri kovai nanpare

ray said...

fine help from you

aswinkumar said...

நல்ல பயனுள்ள பதிவு நண்பா!

Post a Comment