அண்ட்ராய்டு கைபேசிகளிடம் அடிவாங்குகிறதா ஐ போன் ????


அண்ட்ராய்டு முதன் முதலில் 2008 அக்டோபரில் HTC ட்ரீம் (மேலும் G1 என்று அழைக்கப்படும்) இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை ஒரு "ஐஃபோன் கில்லர்." (iphone killer ) என்று அனைவரும் கருதினர் .அது iphone ஐ கொல்லவில்லை என்றாலும் ஐ போன் கைபேசிக்கான ஆரம்ப கட்ட புரட்சியாக இருந்தது . ஆரம்ப அண்ட்ராய்டு இயங்குதளமானது தனது செயல் பாடுகளில் சில குறைகளை கொண்டிருந்தாலும் - வளர்ந்து வரும் அண்ட்ராய்டு சந்தையில் இருக்கும் சாதனங்கள் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் இருக்கின்றது . இங்கே அண்ட்ராய்டு ஐபோன் செயல்பாடுகளை விட ஏன் சிறந்தது என்ற ஆறு விடயங்களை பட்டியலிட்டுள்ளேன் .




1: அண்ட்ராய்டு இயங்கு தளத்தில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்க முடியும்

பதிப்பு 1.0 தொடங்கி, பதிப்பு 2 .3 வரை அண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அவர்கள் கணினி பயன்பாடுகள் அல்லது அண்ட்ராய்டு சந்தை (android market ) போன்ற செயல்பாடுகளை என ஒரே நேரத்தில் இடையூறு இல்லாமல் இயக்க முடிந்தது.ஆனால் ஐ போன் இயங்கு தளத்தில் இது முடியாது .



2: அண்ட்ராய்டு தளத்தின் தகவல்கள் அனைத்தும் உங்கள் முகப்பு திரையில் தெரியும் வகையில்  இருக்கிறது

உங்கள் வசதிக்கேற்ப வானிலை அறிக்கை முதல் பேஸ் புக்குறிப்புகள் வரை அனைத்தையும் முகப்புத் திரையில் அமைக்கலாம் .



3: அண்ட்ராய்டு சந்தை (Android market ) மூலம் மென்பொருட்களை வாங்குவது   apple   app store ஐ விட சுலபமானது .


4: அண்ட்ராய்டு நீங்கள் விரும்பும்  கைபேசியை தேர்வு செய்ய  உதவுகிறது.

அண்ட்ராய்டு  ஒரு சுதந்திர மென்பொருள் என்பதால் இதனை அணைத்து விதமான கைபேசிகளும் உபயோகப்படுத்துகின்றன . Samsung , LG , Motorola  போன்ற கைபேசி நிறுவனங்கள்  அண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் பல்வேறு விதமான தயாரிப்புகளை வெளியிடுகின்றனர் . ஆனால் iphone இயங்கு தளத்தை ஆப்பிள் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும் .


5 :  உங்களுக்குப் பிடித்தமான Rom ஐ நீங்களே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

அண்ட்ராய்டு இயங்கு தளத்தின் மிகப்  பெரும் பலமாக இதனைக் கூறலாம் .இந்த இடுகை tamilwares.blogspot.com தளத்தில் இருந்து திருடப் பட்டது . எமக்குப் பிடித்தமான Rom  (Read Only Memory ) மூலம் நம் கைபேசியின் திரை வடிவம் , செயல் திறன் போன்றவற்றை எளிதாக மாற்றி அமைக்கலாம் . ஆனால் iphone கை பேசியில் இது முடியாத ஒன்று ( jail break  செய்யப் பட்டிருந்தாலும்  குறிப்பிட்ட அளவுக்கே நம்மால் மாறுதல் செய்ய முடியும் )


6 : உங்கள் பணத்திற்கேற்ப அண்ட்ராய்டு  கைபேசியை பெற்றுக் கொள்ளலாம் .

பல்வேறு நிறுவனங்கள் அண்ட்ராய்டு இயங்கு தளம் மூலம் கைபேசிகளை உற்பத்தி செய்வதால் உங்கள் பணத்திற்கேற்ப கைபேசியை வாங்கிக்  கொள்ளும் வசதி இருக்கின்றது . ஆனால் iphone கைபேசியை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே தயாரிப்பதால் அவர்கள் கூறும் விலையை விட உங்களால் நிச்சயமாக குறைவாகப் பெற முடியாது .



பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

shan said...

nice

Anonymous said...

omment 54 by mohanra...@gmail.com, Jan 3, 2011

RT mail2vpguru >>"கூகுள்" உலகின் தலை சிறந்த மென்பொருள் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைச்சிறந்த மென்பொருள் "அன்ட்ராயிடு". ஆனால் என்று தான் மேற்கண்ட வாக்கியத்தை அன்ட்ராயில் படிக்க முடியுமோ?!!?!!? - தெரியவில்லை !!!????!!!
http://code.google.com/p/android/issues/detail?id=3029

அப்பாவி தமிழன் said...

thanks shan

♔ம.தி.சுதா♔ said...

மிகவும் சிரத்தை எடுத்து பதிந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது...

அப்பாவி தமிழன் said...

மிகவும் சிரத்தை எடுத்து பதிந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது...//////


அப்படி எல்லாம் இல்ல தல

தமிழ்த்தோட்டம் said...

ரொம்ப நல்ல பகிர்வு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

அப்பாவி தமிழன் said...

நன்றி தமிழ் தோட்டம்

ஜெஸிலா said...

உங்கள் பதிவுக்கு நன்றி. அண்ட்ராய்ட் கைபேசிகளில் தமிழ் தட்டச்ச முடியுமா? அதற்கான வழிமுறைகளை பகிர முடியுமா ப்ளீஸ்.

அப்பாவி தமிழன் said...

ஜெஸிலா விரைவில் பதிவிடுகிறேன்

செவத்தப்பா said...

@ ஜெஸீலா: தமிழ்விசை எனும் சிறு செயலியை, அண்ட்ராய்ட் மார்கெட்டிலிருந்து பதிவிறக்கி, பயன்படுத்துங்கள்; மேலும், தமிழில் SETT WEB BROWSER-ரும்கூட அங்கேயே கிடைக்கிறது; இதை பயன்படுத்தி, அண்ட்ராய்ட் இயங்குதளமுள்ள எல்லா செல்பேசிகளிலும் தமிழில் தடையின்றி வாசிக்கலாம்.

Post a Comment