ரொம்ப போரடிச்சா உங்க செல்போன கேர்ள் பிரண்டா மாத்தி கடலை போடலாம்

என்னங்க மேல உள்ள தலைப்ப பாத்ததும் சும்மா கதை விடறேன்னு நினைத்து விட்டீர்களா ?? அது தான் இல்லை , இப்போது புதிதாக வந்திருக்கும் iphone 4s இல் siri என்னும் பேசும் பெண்ணைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு , ஆனால் இந்த மென்பொருள் எப்போதோ அண்ட்ராய்ட் கைபேசியில் வந்து விட்டது , அண்ட்ராய்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள . இது ஒரு பேசும் பெண் நீங்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விக்கும் எளிதாகப் பதில் அளிக்கும் ,
உங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து குடுக்கும்.
 உதாரணமாக வேலாயுதம் படம் எப்படி தேறுமா தேறாதான்னு? கேட்டா கண்டிப்பா தேறாது"" அப்படிலாம் இது சொல்லாது , ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் எதனைக் கேட்டாலும் இது எளிதாக பதில் அளிக்கும் உதாரணமாக .how about the weather tommorow ? do i need an umberella ?என்று கேட்டால் நீங்கள் வசிக்கும் இடத்தின் கால நிலையை உடனே காட்டும் , எனக்குப் பசி எடுக்கிறது என்று கேட்டால் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் உணவகங்களை காட்டும் .அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம்.செவ்வாய் கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது.
அது மட்டும் அல்ல உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சா இது கூட ஏடாகூடமா பேசலாம் உதரணமா நான் உன்ன லவ் பண்றேன் ஓடிபோலாமான்னு சும்மா கேட்டு பாருங்க என்ன சொல்லுதுன்னு பாக்கலாம் . நீங்க அண்ட்ராய்ட் கைபேசி வைச்சிருந்தா இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

புதிய செய்தி ... நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

அப்பாவி தமிழன் said...

நன்றி நண்பா

வைரை சதிஷ் said...

அருமை

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அப்பாவி தமிழன் said...

வைரை சதிஷ்

நன்றி நண்பா உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Post a Comment