உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா ???

இணையம் என்னும் சமுத்திரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக உலவ விடுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமாக உள்ளது . கட்டுப்பாடு அல்லாத இணைய வசதி என்றுமே குழைந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது இல்லை .உங்கள் கணினியில் உள்ள இணைய வசதியை பாதுகாப்பாக வைத்திருக்கா விடின் அது உங்கள் குழந்தையின் பாதுகாப்போடு சமரசம் செய்து கொள்வதற்கு நிகரானதாகும் .
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர் ஆனால் பலருக்கும் இதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்திருக்க வாய்ப்பிலை உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க பல இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் (parental Control Software ) இணையத்தில் இருக்கின்றது .அவ்வாறு ஒரு மென்பொருள் தான் (parental Control Software ) எனப்படும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்
பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் உங்கள் குழந்தைகள் செல்லும் பொருத்தமற்ற தளங்கள் காணொளிகள் மற்றும் படங்களை தானாகவே தடை செய்து விடும்

இந்த மென்பொருளை உபயோகிக்க முன் உங்கள் குழந்தையின் வயதை கணக்கில் எடுக்க வேண்டும் . எந்த நேரம் அவர்கள் இணையத்தில்இருப்பார்கள் ?, இண்டர்நெட் பயன்பாடு என்ன வகை. போன்றவற்றை கவனத்தில் கொண்டு இந்த மென்பொருளை நீங்கள் உபயோகப் படுத்தலாம்

அடிப்படையில், இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் நடக்கும் எந்த ஒரு செயல் பாட்டையும் கண்காணித்து நிறுத்த முடியும் .

இதன் பிரதான வசதிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது .


  • ஃபிஷிங், ஆபாசம் , சூதாட்டம், போதை, வன்முறை / வெறுப்பு / இனவாதம், தீம்பொருள் / ஸ்பைவேர் உள்ளிட்ட மேற்பட்ட 70 பிரிவுகள், மற்றும் இணையத் தளங்களை தடுக்க முடியும் .
  • அனைத்து முக்கிய தேடல் இயந்திரங்களிலும் பாதுகாப்பான தேடல்களைப் பெற முடியும் .
  • குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இணைய இணைப்பு இருக்கும் படி மாற்றி அமைக்கலாம்
  • "எப்போதும் அனுமதிக்க" மற்றும் "எப்போதும் தடை" என்ற விருப்ப பட்டியலை இணையத்திற்கு ஏற்றவாறு செயல் படுத்தலாம்
  • சாட் மற்றும் ஆபாச உரையாடல்கள் தானாகவே தடை செய்யும் வசதி

சிறுவர்களை இணையத்தில் கண்காணிப்பது அல்லது பாதுகாப்பது பெற்றோருக்கு ஒரு சவாலான பணியாக உள்ளது. ஆனால் இந்த இலவச பெற்றோர்கட்டுப்பாட்டு நீங்கள் உங்கள் குழந்தையின் தோள் அருகே இருந்து பாதுகாப்பது போன்ற சௌகர்யத்தை தரும் .உங்கள் குழந்தையை பாதுகாப்பாக கண்காணிப்பதற்கும் அவர்கள் நடவடிக்கையை உளவு புரிவதற்கும் பாரிய இடைவெளி உள்ளது . எனவே இந்த மென்பொருள் மூலம் உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்கள் பாதுகாப்பாக இணயத்தில் உலவ வழி செய்யலாம் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்
(tags parental control software in tamil , free parental control software)

தரவிறக்கச் சுட்டி

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

8 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு..

அப்பாவி தமிழன் said...

முனைவர்.இரா.குணசீலன்///
நன்றி மீண்டும் வருக

வைரை சதிஷ் said...

நல்ல பகிர்வு நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மிகவும் பயனுள்ள பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

மகாபாரதத்தில் மங்காத்தா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

i shared to my facebook

அப்பாவி தமிழன் said...

"என் ராஜபாட்டை"- ராஜா ///////மிக்க மிக்க நன்றி நண்பா , இதோ இப்போவே வரேன் மகாபாரதம் படிக்க

அப்பாவி தமிழன் said...

வைரை சதிஷ் ///////

ரொம்ப நன்றி நண்பா

Post a Comment