வாங்க நமக்குன்னு ஒரு tv கம்பெனி ஆரம்பிக்கலாம்

ஆமாங்க நெசமாத் தான் சொல்றேன் இப்போ தொழில்நுட்பத்தோட வளர்ச்சி எல்லைகள் தாண்டி போய்டுச்சு. http://www.qik.com/ என்னும் இந்த தளம் தரும் இலவச வசதியின் மூலம் நம் செல்பேசியில் இருந்தே (camera செல்போன்) நம் கண் முன்னால் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் .இந்த தளத்திற்குச் சென்று உறுப்பினர் ஆகிக்கொள்ளுங்கள் பின்பு இத்தளம் தரும் மென்பொருளை உங்கள் செல்பேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் .அவ்வளவு தான் இனிமேல் உங்கள் கண்முன்னால் நடக்கும் எந்த ஒரு காட்சியையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் .இதன் மூலம் என்ன நன்மை என்கிறீர்களா ?...வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவினர்கள் , மற்றும் நண்பர்களுடன் எளிதாக நீங்கள் விரும்பும் காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் .நேற்று மாலை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் என் நண்பர்கள் சரக்கடித்துவிட்டு செய்யும் கூத்தை எனக்கு நேரடியாக ஒளிபரப்பினார்கள் .அதனால் தான் சொல்றேன் வாங்க நம்மளும் ஒரு டிவி கம்பனி ஆரம்பிச்சுடலாம் .இது மாதிரியே நம்ம கம்ப்யூட்டர் ல இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யற ஒரு தளம் இருக்கு அதையும் பாருங்க கீழே பாருங்க

கணினி மூலம் ஒளிபரப்பு செய்ய --- procast செல்பேசி மூலம் ஒளிபரப்பு செய்ய -- qik

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

அன்புடன் அருணா said...

வாவ்!!! சூப்பர் தகவல்!

அப்பாவி தமிழன் said...

to அன்புடன் அருணா ----வாங்க தல ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் form கு வந்திருக்கேன் . கருத்துக்கு ரொம்ப நன்றி தல

டவுசர் பாண்டி. said...

ஆஹா !! நம்பலே டிவி கம்பனி வைக்கிறதா ?? இன்னாபா இது ஒரே அதிசயமா கீது ??
மெய்யாலுமா ?? இரு பாத்துட்டு வந்து சொல்றேன் . அது காண்டி நடந்துது, சொம்மா, டவுசர் - டிவி இன்னு வெளம்பரம் பண்ண வேண்டித்தான் பா !!

Dr.Rudhran said...

thank you very much. i am just trying it.

அப்பாவி தமிழன் said...

@ dr.rudran pls don frgrt to give me your feedback.thanx for visit my blog

Post a Comment