உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .


இந்த வசதியை நீங்கள் செயல் பட வைப்பதின் மூலம் , நீங்கள் உபயோகிக்கும் கணினி தவிர்ந்து வேறு ஏதும் கணினி / செல்பேசி மூலம் யாரவது உங்கள் பேஸ்புக் பயனர் கணக்கில் நுழைந்தால் அடுத்த நொடியே உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது உங்கள் செல்பேசிக்கு SMS மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் . தகவல் தெரிந்த அடுத்த  நொடியே உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுவதின் மூலம் எவ்விதமான ஹாக்கர்களிடம் இருந்தும் உங்கள் பேஸ் புக் கணக்கை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை செயல் படுத்துவது எவ்வாறு என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம் .

#உங்கள் பயனர் கணக்கில் நுழைந்த பின் Account  > Account Settings  குச் செல்லவும்.

  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )




#அங்கே ஏழாவதாக இருக்கும் Account  settings  குச் செல்லவும் .

  •  அதன் கீழ் Login  Notifications மெனுவில் On  பட்டனை  அழுத்தி சேவ் செய்து    கொள்ளுங்கள் .
  •  ( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )





இனி யாரவது உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாமல் நுழைய முனைந்தால் அது குறித்த தகவல் தானாக உங்கள் மினஞ்சல் / அல்லது குறுஞ்செய்தி மூலம் வந்து சேரும் .
பயனர் கணக்கில் அது மீறி யாரவது நுழைந்தால் பேஸ் புக் அனுப்பும் மாதிரி எச்சரிக்கை செய்தி  கீழே .
( பெரிதாகப் பார்க்க படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )

இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தமிழ்10  மற்றும் இன்ட்ல்லிளில் உங்கள் ஓட்டை செலுத்தவும் .

Tags ( how to turn on face book email notification if some one login from other computer. face book tips , facebook notification )

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

Anonymous said...

thanks.......... because i already lost on of my account

அப்பாவி தமிழன் said...

///thanks.......... because i already lost on of my account//////
lol no worries... you can get it back

Anonymous said...

ya.........very useful matter please all facebook members fallow this ........
thanks thanks thanks

Rajasurian said...

thanks a lot

ad4393 said...


cooll :)))

அப்பாவி தமிழன் said...

Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//////////
நன்றி நண்பரே

அப்பாவி தமிழன் said...

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!////////

நிச்சயம் வருகிறேன் நண்பா

Post a Comment