ஜி மெயிலில் நேரடியாக தமிழில் எழுதுவது எப்படி

தகவல்களை அனுப்ப நிறைய வசதிகள் வந்தாலும், வேலை நிமித்தமாக இ-மெயில் அனுப்பும் வழக்கம் இன்னும் மாறவில்லை. ஜிமெயிலில் தமிழில் டைப் செய்யவும் வசதிகள் உள்ளது. இதன் வழி முறையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஜிமெயில் பக்கத்தில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு செட்டிங்ஸ் பக்கம் திறக்கப்படும். இதில் எனேபில்டு ட்ரேன்ஸ்லிட்டிரேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு கீழே மொழிகளுக்கு தனியாக ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் தமிழ் மொழியை செலக்ட் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் ஸ்குரோல் செய்து கீழே பார்த்தால் சேவ் சேன்ஜஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இனி மீண்டும் ஜமெயிலில், மெயில் டைப் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதில் டைப் செய்ய தொடங்கினால் தமிழில் எழுத்துக்கள் அச்சிடப்படுவதை காணலாம். ஜமெயிலில் டைப் செய்ய, இது மிக எளிய வசதியாக இருக்கும்.

நன்றி thatstamil.com

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

shrichel said...

thanks very much useful to me

sankaranarayanan

Unknown said...

thank u

Anonymous said...

ஓண்ணும் புரியவில்லை

Post a Comment