நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook applications ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள் பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில ஹாக்கர்கள் கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account notification என்னும் வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .
-
